நாற்று நட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்

54பார்த்தது
நாற்று நட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்
தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் அங்குள்ள கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களும் தலையில் பச்சை துண்டு கட்டி கொண்டு அப்பகுதியில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டு இருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து நாற்று வாங்கிய ஹீமாயூனும், பெண் தொண்டர்களும் நாட்டுப்புறப் பாடல் பாடிக் கொண்டே நாற்று நட்டனர். வேட்பாளர் ஹுமாயூன் வயலில் டிராக்டர் ஒட்டி உழவு பணியில் ஈடுபட்டார்.