அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜயை எதிர்த்து போட்டியிட தயார் என்று அக்கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். "தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்து எதை கேட்டாலும் அதை திசைத் திருப்புவதில் தான் திமுக இருக்கிறது. தங்களுடைய மகனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களே தவிர இங்குள்ள பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள்" என்றார்.