விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தளபதியின் கொடியை அன்று முதல் இன்று வரை யார் பிடித்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் பதவி வழங்கப்படும். பெரிய காரில் வந்தாலும், ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும் பதவி வழங்கப்படாது. சைக்கிளை மிதித்துக்கொண்டு தலைவருக்காக போஸ்டர் ஒட்டிய உங்களுக்கு தான் பதவி வழங்கப்படும்” என்றார்.