தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை கழிவறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த எலிசபெத் ராணி என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவில் கழிவறைக்கு தனியாகச் சென்ற நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாளிலேயே தாய் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது