குஜராத்தில் டீச்சர் தம்பதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருச் நகரை சேர்ந்த ஜிதேந்திரா மற்றும் லதா தம்பதி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். அவர்களின் சடலங்களை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலை என்பது கிட்டத்தட்ட முடிவான நிலையில் அது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.