புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே 2 கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. திருச்சி – காரைக்குடி சாலையில் நேற்று (மார்ச் 8) அதிவேகமாக சென்ற 2 கார்கள், டாடா ஏஸ் ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 8 வயது சிறுமி குழலினியும், ஓட்டுநர் மூர்த்தியும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.