பாகிஸ்தானின் பெஷாவரில் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய கோபத்தில், குரூப் அட்மினை ஒருவர் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வாட்ஸ்அப் குரூப்-ல் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் சமரசம் செய்ய முடிவு செய்த நிலையில், ஆத்திரம் தாங்காமல் அட்மினை, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.