இசைஞானி என அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை தொடங்கியது. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன் வரிசையில் இளையராஜாவும் இணைந்தார்.