ரூ. 4 லட்சத்தில் சாலை சீரமைப்பு

79பார்த்தது
ரூ. 4 லட்சத்தில் சாலை சீரமைப்பு
கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் பகுதியில் உள்ளது ஈஸ்வரன் கோவில். இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து 2022-23ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி