சமீப காலமாகவே செங்கோட்டையன் மற்றும் இபிஎஸ் இடையே பனிப்போர் அதிகரித்து வருகிறது. இபிஎஸ் நடத்தும் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கெடுப்பதில்லை. மேலும் தனியார் யூடியூப் சேனல் விழாவில் பேசிய செங்கோட்டையன், பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்து பேசினார். இந்த நிலையில் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை தற்காலிகமாக பறிப்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.