பாஜக தமிழிசை சௌந்திரராஜன் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார், மனமார்ந்த நன்றி. தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை, அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. தமிழ் - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதை பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு நன்றி என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.