பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் எண்ணெய் நிறுவனத்திற்கு டிரைவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் திருச்சூர் அருகேயுள்ள தொழிற்பேட்டையில் உள்ள வளைகுடா பெட்ரோல் கெமிக்கல் நிறுவனத்திற்கு தீ வைத்தார். மூன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அந்த நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகளாக டிரைவராக இருந்த நிலையில், பிப்ரவரியில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.