தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்றுக் கொள்ள 6,000 மையங்களுடன் இந்தி பிரசார சபா உள்ளது; அதேபோல் வட இந்தியாவில் தென்னக மொழி ஒன்றை கற்றுக்கொள்ள சபா உள்ளதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம். தமிழ் பிரச்சார சபாவையும், திராவிட பிரச்சார சபாவையும் வட இந்தியாவில் நிறுவ முடிந்ததா? என வினவியுள்ளார்.