ஆவடி அருகே நெமிலிச்சேரி பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் வெள்ளி சாமான்கள் மற்றும் பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் மிளகாய் பொடி தூவியிருந்ததை கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சண்முகம் கொடுத்த தகவலின் பெயரில் பட்டாபிராம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்பனாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகன் தலைமையில் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணையில் வீட்டின் உரிமையாளர் சண்முகம் 200அடி தூரத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த பொழுது திருட்டு சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது, மிளகாய் பொடி தூவி திருட்டு சம்பவம் அரங்கேறியது பட்டாபிராம் நெமிலிச்சேரி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.