திருவண்ணாமலையில் மாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பௌர்ணமி திதி மார்ச் 13-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11:40 மணிக்குத் தொடங்கி மறுநாள் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12:57 மணிக்கு நிறைவடைகிறது. எனவே மார்ச் 13 இரவு பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.