நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி மாநகர பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று (மார்ச் 13) மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.