நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது குறிப்பாக மாஞ்சோலை பாபநாசம் போன்ற பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சம் மாஞ்சோலை ஊத்து பகுதியில் 24 மில்லி மீட்டர் மழையும் நாலு முக்கு பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் காக்காச்சியில் 14 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.