தெறி, மெர்சல், ஜவான் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள அட்லி தற்போது ‘பேபி ஜான்’ என்ற படத்தை ஹிந்தியில் தயாரித்துள்ளார். இவர் கபில் சர்மா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவர் அட்லியை உருவகேலி செய்தார். அதற்கு அட்லி, “என்னுடைய முதல் தயாரிப்பாளர் ஏ. ஆர். முருகதாஸ் என் தோற்றத்தை பார்க்கவில்லை, கதை சொல்லும் விதத்தை மட்டுமே பார்த்தார். ஒருவர் தோற்றத்தை பார்க்காமல் மனதை வைத்து எடை போடுங்கள்” என்றார்.