கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மிதந்துள்ளன. குழந்தைகளை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, இரட்டை பெண் குழந்தைகளை கட்டைப்பையில் வைத்து ஆற்றில் வீசியது அவர்களது தந்தை தான் என்பது தெரியவந்துள்ளது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததால் ஆற்றில் வீசியதாக தந்தை கூறியுள்ளார். தொடர்ந்து, தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.