ஏர்டெல்: ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால் பேசுவதோடு தினசரி 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். உங்கள் செல்போனில் 5ஜி வசதி இருந்து, 5ஜி சேவை கிடைக்கும் இடத்தில் இருந்தால் வரம்பற்ற டேட்டாவை பெறலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இத்திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்-கள் இலவசம். இதனுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும்.