நாமக்கல்: குமாரபாளையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கோட் என்றால் ஆடு. இந்த ஆட்டுக்கும், அந்த ஆட்டுக்கும் கூட்டு இருக்கிறது என்பது விஜய்யின் கடைசி படத்திலேயே தெரிந்துவிட்டது. விஜய் கூறுகிறார் திமுக 200 தொகுதிகளில் வெள்ளும் என இருமாப்போடு இருப்பதாகவும், அது மைனஸ் ஆகும் எனவும் விஜய் கூறுகிறார். திமுகவை விமர்சித்த விஜய்யை போல பல பேர் ஒன்னுமில்லாமல் போயுள்ளனர்” என விமர்சித்தார்.