விசிக-வில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று (டிச. 15) அறிவித்தார். இன்று (டிச. 16) சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், "கொள்கை தலைவர்கள் அனைவரும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என சொல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள். தவெக-வில் இணைவீர்களா என கேட்கிறீர்கள், என்னுடைய எதிர்கால பயணம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் விரைவில் அறிவிப்பேன்” என்றார்.