கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக புலம்பும் மது பிரியர்கள் மழை நீரில் முதலை வந்துவிடுமோ என பயந்து கொண்டே நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அதனால் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர்.