நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அடுத்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆதார் புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.
அவர் ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.