தென் மாவட்டங்களில் சாதி ரீதியாக நடைபெறும் கொலைகளை தடுக்க வேண்டும் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் களம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர். அப்போது அந்த அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தியும் கோஷம் எழுப்பியபடியும் சென்றனர்.