திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் இருவரும் நேற்றுசெப் .10) தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். பின் கன்னியாகுமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு சாலையோர டீக்கடையில் எம்எல்ஏ ரூபி மனோகரன், எம்பி ராபர்ட் புரூஷ் ஆகியோர் நுங்கு சாப்பிட்டு பதநீர் அருந்தினர். அப்போது பதநீர் அமிர்தம் போல் இருப்பதாக ரூபி மனோகரன் கூறினார்.