காவலர் வீரவணக்க தினத்தையொட்டி நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பாயிண்ட் 22 ரகத் துப்பாக்கிகள் எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகள் செல்ஃப் லோடிங் ரைஸ் என பல்வேறு ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.