தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் கோடைகாலத்தை முன்னிட்டு சிறப்பு நீச்சல் பயிற்சி பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வைத்து நடைபெற்றது. காலையில் நடைபெற்ற பயிற்சியில் சிறுவர்கள் ஏராளமானோர் வருகை தந்து நீச்சல் பயிற்சி பெற்றனர். நீச்சல் பயிற்றுநர்கள் இருவர் இணைந்து இந்த பயிற்சியினை அளித்தனர். இந்த மாதம் இறுதிவரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. காலையில் சிறுவர்களுக்கும், மாலையில் பெரிய மாணவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.