கச்சத்தீவை மீட்கக்கோரி கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இபிஎஸ்க்கு பதிலளித்த ஸ்டாலின், "எங்களை கேள்வி கேட்கும் இபிஎஸ் அவர்களே, நீங்களும் 10 ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள். கச்சத்தீவை மீட்க அப்போது என்ன செய்தீர்கள். இப்போதுகூட டெல்லி சென்று வந்தீர்களே, மீனவர்கள் சிக்கல் குறித்து கோரிக்கை வைத்தீர்களா?" என்று காட்டமாக கேள்வியெழுப்பினார்.