அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், ஜப்பானில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாம். அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.