திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா பிரான்சேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேட்டு பிரான்சேரி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் உடைந்து வீணாக செல்கின்றது. இந்த தண்ணீர் அப்பகுதியில் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். எனவே இதற்கு விரைவில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.