திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பிறப்பு கோ பூஜை நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 16) காலை கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.