திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 49வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தின் கீழே மின் வயர்கள் ஆபத்தான நிலையில் வெளியே தொங்கியபடி காணப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்ததை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 18) வயர்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகள் மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.