வக்ப் திருத்த சட்டத்தை நிராகரிப்போம், வக்ப் திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல், கபர்ஸ்தான்களை விட்டு தரமாட்டோம் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் மேலப்பாளையத்தில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். இதில் விவசாயி அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.