திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பைபாஸ் அருகில் நேற்று (21.02.2024) குடிபோதையில் வாகனம் ஒட்டி வந்த ஆரைக்குளத்தை சேர்ந்த ரமேஷ் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதால் அந்த வாகனத்தில் பயணித்த 4 பேர் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பவத்தில் மீட்பு பணியில் எஸ்டிபிஐ, எஸ்டிடியு தொழிற்சங்கம், பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.