சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'புறநானூறு' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதிக தாடியுடன் அண்மையில் படப்பிடிப்புக்கு அவர் சென்ற நிலையில் தாடியை குறையுங்கள் என்று சுதா கூறியிருக்கிறார், இதற்கு சிவகார்த்திகேயன் மறுப்பு தெரிவித்ததால் கடுப்பான சுதா அங்கிருந்தவர்களை திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிவகார்த்திகேயன் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் இரு தரப்பிலும் சமரசம் பேசுகிறார்.