ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.