திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 'கங்குவா' படம் விமர்சனங்களால் தோல்வி அடைந்ததாக கூறி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமர்சனம், 'கருத்து சுதந்திரம்' என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.