பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு டிச.22-ல் திருமணம்

70பார்த்தது
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு டிச.22-ல் திருமணம்
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு டிச.22ஆம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட தத்தா சாய் என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் இந்தத் திருமணம் நடப்பதாகவும், தொடர்ந்து டிச.24 அன்று ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் சிந்துவின் தந்தை பி.வி.ரமணா தெரிவித்துள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய பி.வி.சிந்து சமீபத்தில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்.

தொடர்புடைய செய்தி