பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். சேதம் அடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். முழு சேதம் அடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.