நெல்லை மாநகர வண்ணாரப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் நேற்று (செப்.16) திருமண கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த பிரச்சனையானது வாய் தகராறில் ஆரம்பித்து கை கலப்பில் முடிந்தது. மாப்பிளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் ரோட்டில் நின்று ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.