திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் திடீர் திருப்பமாக இன்று (செப்.17) மூன்று பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வாறு தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.