வியூ பாயிண்ட் அமைக்கும் பணி தீவிரம்

73பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடைபாதை மற்றும் வியூ பாயிண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்த பணி மந்தமடைந்தது. இதை மழைக்காலத்திற்கு முன் விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மீண்டும் இதன் பணி தற்போது தொடங்கியது. இதில் முதல் கட்டமாக நடைபாதையில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி