திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவி கீழ்த்தளத்தில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலில் தரை ஓடு அமைப்பது, கொடை விழா நடத்துவது சம்பந்தமாக வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து இன்று கல்லிடைக்குறிச்சி வனத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் வனத்துறையினர் இந்துக்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசும் இந்துக்களுக்கு எதிராக ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.