மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு மங்களூர், கொல்லம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வழியாக சிறப்பு ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகளை தென்னக ரயில்வே செய்து வருகின்றது என கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கம் இன்று (அக்.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.