திருநெல்வேலி மாநகராட்சி 28 மற்றும் 30வது வார்டில் உள்ள பகுதிகளில் புதிய குடிநீர் பகிர்மான குழாய்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தினை இன்று (செப்.,19) மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பட்டுராஜன், பீட்டர் சுப்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தார்.