களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் நாளை 24. 03. 2025 முதல் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் இன்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. மழை காரணமாக நேற்று இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.