திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடுகள் பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பாஜகவினருக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது போன்ற நிலையில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் அங்கு சென்றார். மலை உச்சியில் அவர் பக்தர்களிடம் உரையாற்றினார்.