கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனி வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் இரவு நேரத்தில் கரடி உலாவும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டு வைத்துள்ளனர். கரடியை வனப்பகுதியில் விடுவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.