தமிழ்நாடு அரசுக்கு எதிராக பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய 5 பேரையும் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை கையில் எடுத்து அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.